உலகம்

பழமையான டைனோசரின் கால்தடத்தை கண்டுபிடித்த சிறுமி..!

ஜனவரி மாத தொடக்கத்தின் போது, தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள பெண்ட்ரிக்ஸ் விரிகுடாவிற்கு ஒரு குடும்பம் பயணம் செய்துள்ளது. அப்போது 4 வயது சிறுமி 220 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் ஒன்றின் கால்தடத்தை கண்டுபிடித்துள்ளது.

fggh 1122x748 1

லில்லி வைல்டர் என்கிற சிறுமி தனது தந்தை ரிச்சர்ட் உடன் வேல்ஸ் பகுதிக்கு பயணம் செய்திருந்த போது, கால் தடம் ஒன்றினை காட்டியுள்ளார். இதே ரிச்சர்ட் புகைப்படம் எடுத்து தனது மனைவி மம்சாலியிடம் காட்டியுள்ளார். புகைப்படம் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்ததால், ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தியுள்ளார். புதைபடிவத்தை பிரித்தெடுத்து, தேசிய அருங்காட்சியக கார்டிஃப் கொண்டு செல்லப்பட்டு டைனோசர்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அது டைனோசரின் கால் தடம் தான் என்பது உறுதியானது.

116726009 mediaitem116726008

நேஷனல் மியூசியம் வேல்ஸ் பழங்காலவியல் கண்காணிப்பாளர் சிண்டி ஹோவெல்ஸ் இதை “இந்த கடற்கரையில் இதுவரை கண்டிராத சிறந்த மாதிரி” என்று விவரித்தார். இது எந்த வகை அதை விட்டுச் சென்றது என்று சொல்ல இயலாது என்றாலும், அச்சு 10cm நீளமானது மற்றும் 75cm உயரமான டைனோசரிலிருந்து இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் பெண்ட்ரிக்ஸ் விரிகுடாவில் காணப்பட்ட மாதிரிகள் டைனோசர்களைக் காட்டிலும் அதிகமான முதலை வகை ஊர்வனவற்றிலிருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புவியலாளர்களின் ஒட்டுமொத்தக் குழுவும் தெற்கு வேல்ஸ் பகுதியில் இந்த புதைப்படிவத்தை அடிப்படையாக கொண்டு டைனோசர்களின் வாழ்வியல் பழக்க வழக்கங்கள் மற்றும் அவற்றின் நடத்தைகளை ஆராய முயன்றுள்ளது.

Back to top button
error: Content is protected !!