ஆன்மீகம்

வாழ்க்கை முறையை தெரிவிக்கும் விதி ரேகை!

வெற்றியை நோக்கி உயரும் போது, செயல்பாட்டில் என்ன மாற்றங்கள் தேவை என தெரிந்து கொள்வதில், கை ரேகை ஜோதிடம் முக்கியமான பங்கு வகிக்கிறது. இது குறித்து இப்போது பார்ப்போம்.

ரேகை பிரிவுகள்

இடறிவிழும்போது தானே தெரிய வருகிறது, தள்ளி விடுபவர் யார் என்றும், தூக்கி விடுபவர் யார் என்றும். தொடர்ந்து துரோகங்களையும், தோல்விகளையும் அனுபவித்து வருபவர்கள் தங்கள் சிந்தனை மற்றும் முயற்சியில் ஏதோ தவறு இருக்கிறது என்று உணர்ந்து சிறு மாறுதல் செய்ய வேண்டியது அவசியம் ஆகிறது. விதி ரேகையின் அமைப்பு இதை சுட்டிக்காட்டுகிறது. உள்ளங்கையின் ரேகை அமைப்புக்கு ஏற்ப வழிபாட்டு முறைகளும் மாறுபடும். ரேகை பிரிவுகள் பல உண்டு. உதாரணமாக, வரி வட்ட ரேகை, நீள் வட்ட ரேகை, சங்கு உள்ள ரேகை, சக்கரம் உள்ள ரேகை என்று சில முக்கியமான பிரிவுகள் உண்டு.

அபிஷேகம்

இந்த ரேகை பிரிவுகளுக்கு ஏற்பவும் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு ஏற்பவும் வழிபாடு முறைகளும் வரம் தரும் தெய்வங்களும் மாறுபடும். பொதுவானவை என்பது சிலருக்கு பொருந்தலாம். அந்த பொதுவான ஆலய வழிபாட்டில் என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் என்று இப்போது பார்ப்போம்.

பசுவின் பாலினால் அபிஷேகம் செய்தால் செய்பவரின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆயுள் விருத்தியாகும்.

தயிரில் அபிஷேகம் செய்தால் புத்திர பாக்கியம் ஏற்படும். புத்திர தோஷம் விலகும்.

சந்தனமும், பன்னீரும் கலந்து அபிஷேகம் செய்தால் செல்வ வளம், வசதி வாய்ப்புகள் பெருகும்.

சுத்தமான தண்ணீரில் அபிஷேகம் செய்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்

வலம்புரி சங்கினால் பால் அபிஷேகம் செய்தால் மற்றும் நீர் அபிஷேகம் செய்தால் தீவினை மற்றும் கர்ம வினைகள் நீங்கும்.

விபூதியினால் அபிஷேகம் செய்தால் சொகுசான சிரமம் இல்லாத வாழ்வும் மோட்சமும் கிடைக்கும்.

இளநீரினால் அபிஷேகம் செய்தால் மனக்கசப்புகள் நீங்கி குடும்ப வாழ்க்கை நலம் பெறும்.

இதையும் படிங்க:  வேண்டியதை கொடுக்கும் அற்புத மந்திரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: