வேலைவாய்ப்பு

சூப்பர்! நாள் ஒன்றுக்கு ரூ.750 ஊதியத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

Dispenser பணியிடங்களை நிரப்ப தமிழக அரசின் கீழ் செயலாற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது இந்த மாத தொடக்கத்தில் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Dispenser பதவிக்கு 420 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 01.07.2021 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 57 க்குள்இருக்க வேண்டும் . அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Pharmacy/ Integrated Pharmacy ஆகிய பாடங்களில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் தங்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு அமர்வுக்கு ரூ.750/ – விதம் ஊதியம் வழங்கப்பட உள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official PDF Notification – https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21082956.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தினசரி ரூ.760/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு!!
Back to top button
error: