உலகம்இந்தியா

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 12.5 சதவீதமாக உயரும்.. சர்வதேச நாணய நிதியம் கணிப்பு..!

2021-22 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 12.5 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் காரணமாக, பல நாடுகளில் லாக்டவுன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தியாவில் லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதர நிபுணர் கீதா கோபிநாத் கூறுகையில், “எங்கள் முந்தைய கணிப்புடன் ஒப்பிடும்போது 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் வலுவான மீட்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். 2021 ஆம் ஆண்டில் 6 சதவீதமாகவும் 2022 ஆம் ஆண்டில் 4.4 சதவீதமாகவும் வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, 2021 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 12.5 சதவீதம் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், உலகப் பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டால், 2020ஆம் ஆண்டில் 3.3 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருந்த நிலையில், இந்த 2021ஆம் ஆண்டில் 6 சதவீத வளர்ச்சி ஏற்படும். அதேபோல, 2022ஆம் ஆண்டில் 4.4 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலக நாடுகளிலேயே அமெரிக்காதான் இந்த ஆண்டில் கொரோனாவுக்கு முந்தைய தனது பழைய நிலையை எட்டும். மற்ற நாடுகள் 2022ஆம் ஆண்டில்தான் இயல்பு நிலையை அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

ஏற்கனவே, 2021-22ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 11.5%ஆக வளர்ச்சி அடையும் சர்வதேச நாணய நிதியம் கணித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: