ஆரோக்கியம்தமிழ்நாடு

பப்பாளி விதையில் ஒளிந்திருக்கும் எண்ணிடலங்கா நன்மைகள்!

உண்மை என்னவென்றால் நம்முடைய நாட்டுப்பழங்களில் தான் ஆரோக்கியம் அதிகம். குறிப்பாக, பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

என்ன பப்பாளியிலா இவ்வளவு நன்மைகள் இருக்கின்றன என்று நம்மை ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு அதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகக் கொட்டிக் கிடக்கின்றன.

பப்பாளி நிறைய நோய் தீர்க்கும் அற்புதங்களைச் செய்வது என்பது நமக்குத் தெரியும்.

அதிலும் குறிப்பாக நீரிழிவு பிரச்சினை முதல் ரத்த விருத்தி, ரத்தத்தை சுத்தம் செய்வது ஆகிய பல விஷயங்களுக்கு பப்பாளி ஓர் அருமருந்து. ஆனால் பப்பாளியின் விதையை நாம் பெரிதாகக் கண்டு கொள்வதே இல்லை.

பப்பாளி பழத்தில் இருப்பதைப் போலவே பப்பாளியின் விதையிலும் ஏராளமாக மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன என்று மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் குறிப்பிடுகிறார்கள்.

பப்பாளி விதைகள் பெப்பைன் என்ற என்சைமைக் கொண்டுள்ளது. அது முழுக்க ஜீரணத்திற்கு உதவுகிறது. ஆகவே கல்லையும் ஜீரணிக்கக் கூடிய ஆற்றல் இந்த விதைகளுக்கு உண்டு.

ஆகவே உடலுக்கு இவ்வளவு நன்மை தரக் கூடிய இந்த பப்பாளி விதையை வாரம் ஒரு முறையாவது உங்கள் உணவினில் எடுத்துக் கொள்ளுங்கள். எந்த நோயையும் உங்களை தைரியமாக அண்டாது. அவற்றை ஓட ஓட விரட்டலாம்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

பப்பாளி விதையின் நன்மைகள் பற்றி பார்ப்போம்

குடலில் உள்ள புழுக்கள் அழிய

எலுமிச்சை ஜூஸில் அரை ஸ்பூன் பப்பாளி விதை பொடியை கலந்து குடித்தால் கல்லீரலில் உருவாகும் பெரிய பாதிப்பான கல்லீரலில் சிரோசிஸ் நோயை குணப்படுத்தும்.

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் பப்பாளி விதைகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படாமல் தடுக்கலாம். தினமும் பப்பாளி விதை பொடியை சாப்பிட்டால் குடலில் உள்ள புழுக்களை எளிதில் அழிக்கலாம்.

கல்லீரல் பலப்படுத்த

பப்பாளி விதையில் உயிர்ச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதனால் கல்லீரலில் இழைநார் வளர்ச்சி குணமடைய இந்த பப்பாளி விதை மிகவும் உதவியாக இருக்கும்.

5–6 பப்பாளி விதைகளை அரைத்து உணவாக அல்லது சாறாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி தொடர்ச்சியாக 30 நாட்கள் செய்தால் கல்லீரலில் நோய் வருவதை தடுக்கலாம்.

சிறுநீரகத்தை பாதுகாக்க

சிறுநீரகம் ஆரோக்கியமாகவும் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பைத் தடுக்கவும் பப்பாளி விதை மிகவும் உதவியாக இருக்கிறது என்று கராச்சி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாது, சிறுநீரக நச்சு தொடர்பான நோய்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

வயிற்றுப் பூச்சியை அழிக்க

தினமும் அல்லது வாரம் மூன்று முறையாவது பப்பாளி விதைகளை சாப்பிட்டால், வயிற்றில் பூச்சிக்கள் மற்றும் புழுக்கள் ஏற்படாது. பப்பாளி விதைகளில் உள்ள சத்துக்கள் வயிற்றுப் பூச்சிகளை அழிக்கிறது.

இயற்கை கருத்தடைக்கு

குழந்தைப் பேறினை தள்ளிபோட வேண்டும் என நினைப்பவர்கள், மாத்திரை மருந்து களுக்கு போகாமல் இந்த பப்பாளி விதைகளை உண்ணலாம். இவை இயற்கை யாகவே கருத்தரிக்க விடாமல் செயல்படும்.

கேன்ஸர் செல்களை அழிக்க

இவைகளை தொடர்ந்து உட்கொள்ளும்போது, உடலில் கொடிய மாற்றங்களை உண்டாக்கும் கேன்ஸர் செல்கள் உருவாகாது என ஆய்வு கூறுகின்றது.

loading...
Back to top button
error: Content is protected !!