இந்தியா

ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளை திருமணம் செய்துகொண்ட வாலிபர் – சத்தீஸ்கரில் நடந்த சம்பவம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் தான் காதலித்த இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் ஒரே மணமேடையில் வைத்து திருமணம் செய்துள்ள சம்பவம் ஆச்சரியப்படவைக்கிறது. விவசாயியான மணமகன் தான் காதலித்த இரு பெண்களை ஒரே நேரத்தில் கரம் பிடித்துள்ளார்.

ஒரே மேடையில் திருமணம்

பொதுவாக திருமணம் ஆகாதவர்கள் பெண் கிடைக்கவில்லை, இன்னும் திருமணமாகவில்லை என்று புலம்பி கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் ஒரு வித்தியாசமான சம்பவம் இந்தியாவில் அரங்கேறியிருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தால்பூர் மாவட்டத்தில் வசிக்கும் விவசாயியான சந்து மௌரியா என்ற இளைஞர் ஜனவரி 3 ம் தேதி தான் காதலித்த இரண்டு பெண்களை பெற்றோர்கள் சம்மதத்துடன் மணமுடித்துள்ளார். சுதாரியா என்ற இளம்பெண் சந்து மௌரியா விவசாயப்பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் மேல் காதல் வயப்பட்டதாகவும், ஹசீனா என்ற இளம்பெண் சந்துவை திருமண நிகழ்ச்சி ஒன்றில் கண்டு காதல் வயப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

download 10

இதுகுறித்து இம்மூவரும் அறிந்த பிறகு மூன்று பேரும் ஒன்றாக ஒரு வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். பின்பு மூன்று வீட்டாரின் முழு சம்மதத்துடன் இவர்களது திருமணம் ஒரே மேடையில் ஒரே சடங்குகள் செய்யப்பட்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. இத்திருமணத்திற்கு திருமண பத்திரிக்கை அளிக்கப்பட்டு பல நூறு பேர் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறது.

Back to top button
error: Content is protected !!