இந்தியா

இரவில் இருட்டான இடத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்ற மூவர்.. பின்னர் நடந்த பயங்கரம்..

இருட்டான இடத்தில் இயற்கை உபாதைகள் கழிக்க சென்ற இரண்டு மகள்கள் மற்றும் தாயார் மீது இரயில் மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர். பரிதாபாத்தை சேர்ந்தவர் ராஜீவ். இவர் மனைவி சுனிதா. தம்பதிக்கு சிப்பி (18) மற்றும் இந்து (16) என இரு மகள்கள் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு சுனிதா, சிப்பி, இந்து ஆகிய மூவரும் கடைக்கு சென்றனர். பின்னர் இரவு 8 மணியளவில் அங்குள்ள இருட்டான பகுதிக்கு இயற்கை உபாதைகளை கழிக்க சென்றனர். பின்னர் அருகில் இருந்த இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மூவர் மீதும் இரயில் மோதியது.

இந்த பயங்கர சம்பவத்தில் மூவரும் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் மூவரின் சடலங்களையும் கைப்பற்றினார்கள். இரவு நேரங்களில் இது போல இரயில் வரும் இடங்கள் அருகில் இயற்கை உபாதைகள் கழிக்க செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Back to top button
error: Content is protected !!