நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் கடும் வெப்பம் மற்றும் வெயிலின் பிடியில் சிக்கியுள்ளன. தலைநகர் டெல்லியில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக மக்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். கோடை காலம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் வரும் நாட்களிலும் அதிலிருந்து விடுபடப்போவதில்லை. அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் அதிக வெப்பம் நிலவியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மாதாந்திர அதிகபட்ச சராசரி வெப்பநிலை 40.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, 1950-க்குப் பிறகு டெல்லியில் ஏப்ரல் மாதத்தில் அதிக வெப்பம் இருப்பது இது இரண்டாவது முறையாகும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh