கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்றுநோய் காரணமாக நீண்ட காலமாக மூடப்பட்ட பள்ளிகள், இப்போது மே 16 ஆம் தேதியன்று மீண்டும் திறக்கப்பட உள்ளதால் பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே உற்சாக உணர்வு ஏற்பட்டுள்ளது. அதாவது, கொரோனாவால் மாணவர்கள் இரண்டு வருடங்களை இழந்துவிட்டதால், பள்ளிகளை திறப்பதை ஒத்திவைப்பதில் அர்த்தமில்லை என்று அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது. மேலும் குழந்தைகளின் நலனுக்காக அவர்கள் பள்ளியில் இருப்பது முக்கியம் என்றும் ஒவ்வொரு பெற்றோரும் அதை விரும்புவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றாலும் அவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து கல்வி மற்றும் சுகாதாரத்துறை இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது பெரும்பாலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டாலும் இந்த தகவலை உறுதி செய்த உயர்கல்வி அதிகாரி ஒருவர், ‘தற்போது, மாணவர்களுக்கும் தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. நேர அட்டவணைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது தனியார் பள்ளிகளாலோ அல்லது உச்ச நீதிமன்றத்தினாலோ கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது தொற்றுநோய் காரணமாக கடந்த 2020-21 மற்றும் 2021-22 ஆகிய இரண்டு கல்வி ஆண்டுகளில் மாணவர்கள் கற்றலைத் தவறவிட்டதால், மே 16 முதல் ஆப்லைன் வகுப்புகள் மீண்டும் தொடங்கும் என்று பெற்றோர்களும் பள்ளி நிர்வாகிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், புதிய கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழக்கமான பாடத்திட்டத்துடன் சேர்த்து ஒரு ஆண்டு கால பிரிட்ஜ் கோர்ஸ் இருக்கும் என்று தெரிகிறது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh