தமிழ்நாடு

திருமணத்தை நிறுத்த வந்த காதலி! முதலிரவில் மணப்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை

முதலிரவின் போது தம்பதியினர் ஓட்டம் பிடித்த நிலையில் அதன் பின்னணி என்ன என்பது குறித்து தெரியவ்னதுள்ளது.

சித்தூர் மாவட்டம் பெத்த பஞ்சானியை சேர்ந்த ஒரு இளம்பெண் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இதே நிறுவனத்தில், வேலை செய்யும் சித்தூர் மாவட்டம் கங்கவரம் மண்டலம் மிட்ட மீதகுரப் பள்ளியை சேர்ந்த கணேஷ் (25) என்பவருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

அதன் படி பெற்றோரிடம் அனுமதி கேட்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கணேசுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் சொந்த கிராமத்திற்கு வந்தார்.

இதையடுத்து தொற்றிலிருந்து கணேஷ் மீண்டார். அவருக்கு பெத்தபஞ்சானி மண்டலம் அப்பன பள்ளியை சேர்ந்த இளம்பெண்ணுடன் திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்தனர். இவர்களது திருமணம் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நடக்க இருந்தது.

இந்நிலையில் கணேஷின் நண்பர்கள் மூலம் தகவல் அறிந்த அவரது காதலி பெங்களூருவில் இருந்து அவசர அவசரமாக மிட்டமீதகுரப் பள்ளிக்கு வந்தார்.

ஆனால் அதற்குள் கணேஷ் திருமணம் முடிந்து விட்டது. இதனால் கங்கவரம் மற்றும் பெத்தபஞ்சானி பொலிசாருக்கு இளம்பெண் புகார் அளித்தார்.

வெள்ளிக்கிழமை இரவு நடக்க இருந்த முதலிரவு நிகழ்ச்சியை தயார் செய்து கொண்டிருந்த நிலையில் அங்கு இளம்பெண் சென்றதோடு தன்னுடைய காதலனிடம் முறையிட முயற்சித்தார்.

ஆனால் கணேசின் உறவினர்கள் இளம்பெண்ணை தாக்கினர். இதுகுறித்தும் பெத்தபஞ்சானி போலீசார் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் தங்களை பிரித்து விடுவார்களோ என பயந்து முதலிரவு அறையிலிருந்து புதுமண தம்பதியினர் ஓட்டம்பிடித்தனர்.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து ஏமாற்றிய கணேஷை கைது செய்ய வேண்டும் என்று கணேஷின் காதலி போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

loading...
Back to top button
error: Content is protected !!