தமிழ்நாடுமாவட்டம்

பொதுத்தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரை திறக்கப்பட்டன. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்பட்டதாலும், மாணவர்கள் படிப்பதற்கு போதுமான கால அவகாசம் இல்லாததாலும் பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தை குறைத்தது.

பள்ளிகள் திறப்பதற்காக அமைக்கப்பட்ட குழு ஆசிரியர்களுக்கு பாடத்திட்டத்தை நடத்தி முடிக்க தேவையான வேலை நாட்களை கணக்கிட்டு வழங்கியது. இதன் அடிப்படையில் 10, 11, 12ம் வகுப்பு எழுதும் மாணவர்களுக்கு ஏப்ரலில் செய்முறைத் தேர்வை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற உள்ளது.

அதை தொடர்ந்து மே மாதம் பொதுத் தேர்வை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்கம் தயாரித்துள்ளது. அதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: