10, மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் இன்று நண்பகலில் இணையத்தில் வெளியாகிறது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த கல்வி ஆண்டுக்கான நேரடி வகுப்புகள் சற்று தாமதமாகவே தொடங்கின. இதனைக் கருத்தில் கொண்டும், மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டும், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழக்கமாக நடைபெறும் மார்ச் மாதத்திலிருந்து மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ளன.
இந்நிலையில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட இருப்பதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று அவர்களுக்கென்று வழங்கப்பட்ட கடவுச்சொல்லை பயன்படுத்தி ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh