ஆன்மீகம்தமிழ்நாடு

வடக்கு பார்த்த வாசல் யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு துரதிர்ஷ்டம்?

நான் வாழக் கூடிய வீட்டை, சந்தோஷமான இல்லமாக மாற்றுவதற்கு நிம்மதி அவசியம் தேவை. அந்த நிம்மதியைத் தரும் வரிசையில் வாஸ்துவும் அடங்கியுள்ளது. நமக்கு கையில் கிடைக்க பெறக்கூடிய செல்வமும் அடங்கியுள்ளது. வாஸ்துவும் செல்வமும் ஒரு சேர அமைந்துவிட்டால் நிம்மதி நிலைத்திருக்கும் அல்லவா? ஒருவருக்கு தன் ஜாதகப்படி வாஸ்து எதிர்பாராமல் அமைந்துவிட்டது என்றாலோ அல்லது அவரே வாஸ்து நிபுணரை பார்த்து அமைத்துக் கொண்டாலும் யோகம் வர தான் செய்யும். வாஸ்துப்படி நம்முடைய இல்லம் அமைவது கூட ஒரு அதிர்ஷ்டம் தான். அதிலும் வடக்கு பார்த்த வாசல் ஒருவருக்கு அமைந்து விட்டால் சொல்லவே தேவையில்லை! குபேரரே அவர் வீட்டில் குடி வந்து விட்டதாக நினைத்துக் கொள்ளலாம். இந்த வடக்கு பார்த்த வாசல் யாருக்கு அதிர்ஷ்டத்தை தரும்? யாருக்கு அதிர்ஷ்டத்தை தராது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே வடக்குத் திசை வைத்துள்ள வீட்டில் வசிப்பவர்கள் செல்வ வளத்துடன் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிடத்தில் வடக்கு திசை புதனுக்குரியது திசையாக சொல்லப்பட்டுள்ளது. நமக்கு செல்வங்களை அள்ளித் தருவதும் இந்த புதன் பகவான் தான். செல்வத்துக்கு எல்லாம் அதிபதியான குபேரர் வசிப்பதும் இந்த வடக்கு திசையில் தான்.

பொதுவாக சொந்தத் தொழில் செய்பவர்கள், சொந்தமாக கடை வைத்திருப்பவர்கள், வடக்குப் பார்த்த வாசலை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதிகப்படியான பணம் புரளும் வேலையைச் செய்பவர்கள் வடக்கு திசை வாசலில் உள்ள வீட்டில் வசிப்பதும், வடக்கு திசை வாசல் வீட்டில் வசிப்பவர்கள் கட்டாயம் செல்வ வளத்தை பெற்றவர்களாக தான் இருப்பார்கள் என்பதும் நிதர்சனமான உண்மை.

சொந்த வீடாக இருந்தாலும், வாடகை வீடாக இருந்தாலும் வடக்கு வாசலில் வசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் கட்டாயம் தேடி வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கூட, கூடிய விரைவிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் கொண்டவர்களாக மாறுவார்கள் என்பதும் உறுதி. வடக்கு திசையில் வாசல் இருக்கும் வீட்டில் வசிப்பவர்கள் அதிகமாக சேமிக்கலாம். கடன் வாங்கி வீடு கட்டினால் கூட, அதை கூடியவரையில் திருப்பித் தரக் கூடிய அளவிற்கு வருமானம் வந்துவிடும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டாகும். திடீரென்று எதிர்பாராத பொருள் சேர்க்கையும் உண்டாகும்.

எந்த ராசியை கொண்டவர்க்கும் வடக்கு திசை பார்த்த வீடானது யோகத்தை அள்ளி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பிட்டுச் சொன்ன போனால் புதனின் ராசிகளான மிதுன ராசிக்கும், கன்னி ராசிக்கும் அதிகப்படியான அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் 6, 8, 12 ஆம் இடத்தில் இருந்தால் வடக்கு பார்த்த வாசல்படி அவ்வளவு சிறந்ததாக அமையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக வடக்கு பார்த்த வாசலில் இருப்பவர்கள் உழைக்காமல் இருந்தால் பணம் கொட்டும் என்பது அர்த்தமில்லை. மற்ற திசைகளில் இருப்பவர்கள் வசதி படைத்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதும் அர்த்தம் இல்லை. எது எப்படியாக இருந்தாலும், உழைப்பை முதலீடாக போடாமல், எந்த முயற்சியையும் எடுக்காமல் ‘கஷ்டம் என்னை விட்டு போகவில்லை’ என்று புலம்பினால் அதற்கு தீர்வு எதுவும் கிடையாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

மேலும் இது போன்று பல சுவாராஸ்யமான வாஸ்து சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: