பொழுதுபோக்கு

ரசத்திற்கு வாசனையை சேர்க்கும் ரசப் பொடி.. நாமே வீட்டில் சுகாதாரமாக செய்யலாம்..!!

ரசத்திற்கு வாசனையை சேர்க்கும் ரசப் பொடி- நீங்களே இப்போது வீட்டில் சுகாதாரமாக செய்யலாம்.

தேவையான பொருள்கள்

துவரம் பருப்பு – 2 ஆழாக்கு

கடலைப் பருப்பு – 1 ஆழாக்கு

காய்ந்த மிளகாய் – 2 ஆழாக்கு

தனியா – 2 ஆழாக்கு

மிளகு – 2 ஆழாக்கு

சீரகம் – 2 ஆழாக்கு

விரலி மஞ்சள் (சிறியதாக) – 12

செய்முறை

மேலே கொடுக்கப்பட்டு அனைத்து பொருள்களையும் நன்கு வெயிலில் காய வைத்து சுத்தம் செய்து கல் நீக்கி நற நற என்று அரைத்துக் கொள்ள வேண்டும். (அதாவது ரவை போல அரைக்க வேண்டும். நைசாக அரைத்தால் ரசம் கெட்டுவிடும்)

பின்குறிப்பு

எந்தப் பொடிகள் ஆனாலும் பொருட்களை வறுத்துப் பேப்பரில் ஆற வைக்க வேண்டும். ஆறிய பின்னர் மிக்சியில் போட்டுப் பொடி செய்யவும். பொடியான பின்னும் கூட பேப்பரில் ஆற வைத்துக் கை போடாமல் ஸ்பூன் கொண்டு உபயோகப்படுத்தவும். அப்படிச் செய்தால் நீண்ட நாட்கள் வரும்.

மருத்துவ நன்மைகள்

ரசம் நோய் எதிர்ப்பு சக்திகளை வளர்க்க துணை புரிகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  டேஸ்ட்டியான சிக்கன் பிரட்டல்!
Back to top button
error: