சினிமாபொழுதுபோக்கு

சிம்புவின் மாநாடு படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது – குஷியில் ரசிகர்கள்..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில், கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்திவைக்க பட்டது. இந்நிலையில், இன்று மாநாடு படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

மாநாடு:

சிம்பு தற்போது அடுத்தடுத்து திரைப்படங்கள் நடிப்பதில் செம்ம பிஸியாகி வருகிறார். அந்த வகையில், சில நாட்களிலேயே, சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ’ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார். அதன் டீஸர் தீபாவளிக்கு வெளியானது. இதை தொடர்ந்தும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்கும் மற்றொரு படமான ’மாநாடு’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் மாநாடு படம் வெளியாகிறது.

abdul

இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரில், சிம்பு முதல் முதலாக இஸ்லாமிய வேடத்தில் இருக்கிறார். துப்பாக்கியை அருகில் வைத்துக்கொண்டு தொழுகையில் இருப்பது போன்றும், பின்னணியில் அரசியல் கலவரம் நடப்பது போன்றும் இருக்கிறது. இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற வேடத்தில் நடிக்கிறார். மாநாடு படம் கடந்த பிப்ரவரி மாதத்தில் பூஜையுடன் தொடங்கியது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணத்தினால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்து. ஊரடங்கு முடிந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு ஆரபித்து இன்று பாஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

venkat

இப்படத்தில், சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜெ.சூர்யா, பாரதிராஜா,எஸ்.எ.சந்திரசேகர், பிரேம் ஜி, கருணாகரன்,தாஜ்மஹால் மனோஜ், பிக் பாஸ் டானியல், மகேந்திரன் போன்றவர்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் பஸ்ட் லுக் டீஸர் மிக பிரம்மாண்டமாக வெளியானது. சிம்புவின் ரசிகர்கள் அனைவரும், படம் வெளிவருவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

loading...
Back to top button
error: Content is protected !!