சினிமா

வெளியானது ஜி.வி. பிரகாஷ்-கௌதம் மேனன் இணையும் ‘செல்ஃபி’ படத்தின் பர்ஸ்ட் லுக்..!

ஜி.வி. பிரகாஷ்-கௌதம் மேனன் இணையும் ‘செல்ஃபி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார்.

வெற்றிமாறனின் அசோசியேட் மதிமாறன் இயக்கும் இந்த ‘செல்ஃபி’ படத்தில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாகவும் பிகில் பட புகழ் வர்ஷா பொல்லம்மாவும் நடிக்கின்றனர்.

மேலும், இப்படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படம் விரைவில் தியேட்டர்களில் வெளியாகும் என தயரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. இன்று வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது.

இப்படத்தின் டைட்டிலுக்கு கீழ் Confessions of an Engineer என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  வெளியானது ‘மைக்கேல்’ டைட்டில் போஸ்டர்!
Back to top button
error: