இந்தியா
அப்பாடா.. 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி..

டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தடுப்பூசி எப்போது போடுவது என்பது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது.
இறுதியில் நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட துவங்குவது என முடிவு செய்யப்பட்டது.
முதலில் சுகாதார ஊழியர்கள் உட்பட முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கும், அதனைத் தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 50 வயதுக்குட்பட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்ட 27 கோடி பேருக்கும் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..