இந்தியாதமிழ்நாடு

நாளை மாலையுடன் முடிகிறது இறுதிகட்ட தேர்தல் பிரசாரம்.. அரசியல் கட்சிகள் மும்முரமாக வாக்கு சேகரிப்பு..!

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள சட்டப்பேரவைக்‍கான தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவு பெறுவதை முன்னிட்டு, இறுதிக்‍கட்ட வாக்‍கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய சட்டப்பேரவைகளுக்‍கான தேர்தல் வரும் 6-ம் தேதி, ஒரேகட்டமாக நடைபெறுகிறது. மே 2-ம் தேதி வாக்‍கு எண்ணிக்‍கை நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்‍கப்படவுள்ளன.

இந்நிலையில், தேர்தலுக்‍கு 2 நாட்களே உள்ளதாலும், நாளையுடன் பிரச்சாரம் ஓய்வு பெறுவதை முன்னிட்டும் 3 மாநிலங்களிலும் பிரச்சாரம் உச்சக்‍கட்டத்தை எட்டியுள்ளது. தலைவர்கள் இறுதிகட்ட வாக்‍கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே தமிழகத்தில் தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான நாளை, இரவு 7 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்‍கப்பட்டுள்ளது. ‍வழக்கமாக பரப்புரையின் இறுதி நாளில், மாலை 5 மணி வரை மட்டுமே பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்‍கப்படும். ஆனால் இம்முறை கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்‍கது.

இதையும் படிங்க:  தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: