தமிழ்நாடுமாவட்டம்

கிணற்றில் விழுந்த யானை.. 15 மணிநேரத்திற்கு பின்னர் உயிருடன் மீட்பு..

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சபள்ளி சின்னாறு அணையை அடுத்த ஏலகுண்டூர் என்ற இடத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றில் இன்று அதிகாலையில் பெண் யானை ஒன்று தவறி விழுந்தது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, 50 அடி ஆழ கிணற்றுக்குள் யானை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதலில் யானையை கயிறு கட்டி தூக்கியபோது, கயிறு நழுவி கிணற்றின் பக்கவாட்டில் உள்ள பகுதியில் யானை விழுந்தது. இதனையடுத்து மீண்டும் யானையை கயிறு கட்டி தூக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, கிணற்றில் விழுந்த யானை வெற்றிகரமாக மீட்கப்பட்டது. மீட்புப் பணிகளின் போது யானையின் உடலில் 2 மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டன. மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் கிரேன் உதவியுடன் யானை மீட்கப்பட்டது.

loading...
Back to top button
error: Content is protected !!