இந்தியாதமிழ்நாடு

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் எப்போது? டெல்லியில் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..

தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் தேதியை முடிவு செய்ய தேர்தல் ஆணையத்தின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டசபைகளில் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், தேர்தல் நடத்தப்படுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் 5 மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்புக்காக 45 கம்பெனி துணை ராணுவப் படை நாளை தமிழகம் வருகிறது. ஒவ்வொரு கம்பெனியிலும் 100 வீரர்கள் வீதம், 4500 பேர் இடம்பெற்று இருப்பார்கள். இதேபோன்று, தேர்தல் நடைபெறும் மற்ற மாநிலங்களுக்கும் துணை ராணுவப்படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுளள்னர்.

இந்நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக இன்று டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.

Back to top button
error: Content is protected !!