இந்தியா

டெல்லி விவசாயிகள் போராட்டம்.. இதுவரை 248 பேர் உயிரிழப்பு..

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 248 பேர் உயிரிழந்துள்ளதாக சம்யுக்‍தா கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

89-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. விவசாயிகளுடன் மத்திய அரசு இதுவரை நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 248 பேர் உயிரிழந்துள்ளதாக சம்யுக்‍தா கிசான் மோர்ச்சா அமைப்பு கூறியுள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்‍கையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில், மாரடைப்பு, குளிர் மற்றும் நோய் காரணமாக, வாரத்திற்கு சராசரியாக 16 பேர் மரணித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக போராட்டத்தை தொடங்கியபோது, ஒரு வாரத்தில் பிரச்சனை தீர்ந்துவிடும் என நினைத்ததாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!