விளையாட்டு

வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை மரணம் – இறுதி சடங்கிற்கு செல்ல முடியாத சோகம்..!

இந்திய டெஸ்ட் அணியில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட ஹைதராபாத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை முஹம்மது கவுஸ் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இறுதி சடங்கிற்கு செல்ல முடியாமல் சிதற்போது ஆஸ்திரேலியாவில் சிக்கிக்கொண்டு உள்ளார் முகமது சீராஜின்.

தந்தை மரணம்:

இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது சிராஜ். ஐபிஎல் போட்டியில் பெங்களூர் ராயல்ஸ் அணியில் தான் இவர் முதன்முதலாக விளையாடத் தொடங்கினார். அனைத்து போட்டிகளிலும் அவரது பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. முகமது சிராஜின் குடும்பம் ஹைதராபாத்தில் உள்ளது. இவரது தந்தை முகமது கவுஸ் ஆட்டோ ஓட்டி வந்தார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசியது குறித்து அறிந்த அவர், தனது மகனை அழைத்துப் பாராட்டினார்.

download 7 5

முகமது சீராஜின் தந்தை ஆட்டோ ஓட்டி தன் மகனின் கிரிக்கெட் கனவை நிறைவேற்ற போராடினார். அவருக்கு வயது 53. அவரது கனவை நிறைவேற்றிய முகமது சிராஜ் இந்திய அணியில் ஒரு ஒருநாள் போட்டியிலும், மூன்று டி20 போட்டியிலும் ஆடி உள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில், முகமது சிராஜ் டெஸ்ட் அணியில் முதன் முறையாக தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் தொடருக்கு பின் அவர் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்றார். இந்நிலையில் அவரது தந்தை நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

muhamed

இந்தியா தங்கி இருக்கும் சிட்னி நகரம் உட்பட தெற்கு ஆஸ்திரேலியாவில் கடும் லாக்டவுன் விதிகள் கடந்த சில நாட்களாக அமலில் உள்ளது. இந்த நிலையில், முகமது சிராஜ் இந்தியா கிளம்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மிகுந்த வருத்தத்தில் உள்ளார். அவருக்கு கேப்டன் கோஹ்லி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆறுதல் கூறி சமாதானம் செய்தார்கள். ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் துவங்கி உள்ளதால் கடும் லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் தன் தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளார்.

loading...
Back to top button
error: Content is protected !!