விளையாட்டு

28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா உலகக் கோப்பையை தட்டித்தூக்கிய தினம்..!

2011ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு தட்டித்தூக்கி சாதனைப் படைத்தது.

28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற கனவுடன் இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் களமிறங்கியது.

இலங்கை அணிக்கு எதிரான இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்கள் முடிவில் 276/4 ரன்கள் குவித்தது. முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்த்தனே 103* (88) ரன்கள் குவித்து இலங்கை அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

இதனை தொடர்ந்து இலக்கைத் துரத்த களமிறங்கிய இந்திய அணியின் விரேந்திர சேவாக் (0), சச்சின் டெண்டுல்கர் (18) ஆகியோர் சொர்ப்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர்.

அந்த நேரத்தில் நாடே அதிர்ச்சி கலந்த சோகத்தில் இருந்தது. அவர்களை அடுத்து கவுதம் கம்பீர், விராட் கோலி (35) இருவரும் சேர்ந்து 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இதனால் ஓரளவு , இந்திய அணிக்கு அழுத்தங்கள் நீங்கியது. தொடர்ந்து கம்பீர், மகேந்திரசிங் தோனி 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வெற்றிப்பாதை நோக்கி அழைத்துச் சென்றனர். தோனி சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து வைத்து, இந்திய அணிக்குக் கோப்பையைப் பெற்றுக்கொடுத்தார்.இப்போதும் தோனி சிக்ஸர் அடித்து போட்டியை வெற்றி செய்தது அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் உடலை சிலிர்க்க வைக்கும் தருணமாகவே உள்ளது.

சிறப்பாக விளையாடி வந்த கம்பீர் சதம் விளாசுவார் என எதிர்பார்த்த நிலையில் 42ஆவது ஓவரின்போது 97 (122) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தோனி 91 (79) ரன்கள் விளாசி கடைசிவரைக் களத்தில் இருந்தார். இதனை தொடர்ந்து ஆட்டநாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:  கொரோனா பரவலுக்கு மத்தியில் ஆரம்பமாகிறது ஐபிஎல் திருவிழா.. இன்று மும்பை- பெங்களூரு அணிகள் மோதல்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: