இந்தியா

போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுக்கப்பட்ட கொடூரம்..

மராட்டிய மாநிலம் யவத்மால் பகுதியில் நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ஒரு மருத்துவர், சுகாதார பணியாளர், ஆஷா பணியாளர் ஒருவர் ஆகியோர் அடங்கிய குழு இந்தப் பணியை மேற்கொண்டது.

இந்த நிலையில், 5-வயதுக்கு உட்பட்ட 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகள் நலமுடன் இருப்பதாக மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.

அதேவேளையில், அஜாக்கிரதையாக செயல்பட்ட மருத்துவ பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Back to top button
error: Content is protected !!