இந்தியா

காலணியை கடித்த நாய்.. பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற நபரின் கொடூர செயல்..!

காலணியை கடித்ததற்காக நாயை பைக்கில் கட்டிவைத்து சாலையில் இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் எடக்கரா என்ற பகுதியில், கான்ஸ்டன்ட் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது காலணியை ஒரு நாய் கடித்து விட்டது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றார் சேவியர்.

அதனை தொடர்ந்து அந்த நாயை தன் பைக்கில் கட்டிவைத்து பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றார். இந்த காட்சிகளை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பதிவு செய்தார்.

இதையடுத்து, விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின்கீழ், சேவியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில், சேவியரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஆனாலும் சேவியர் ஜாமினில் வெளியே வந்தார். இதற்கிடையே, படுகாயம் அடைந்த நாய்க்கு, கால்நடை மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:  22 வயது மதிக்கத்தக்க நபருடன் வீட்டை விட்டு ஓடி வந்த 18 வயது பெண்! விமானத்தில் அனுப்பி வைத்த போலீசார்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: