இந்தியா

நாட்டின் ஜிடிபி 7.3% ஆக வீழ்ச்சி!!

2020 – 2021ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் கொரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இந்த நிலைமை சீராகும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து பொருளாதாரம் சரிவடைந்துள்ளது. ரிசர்வ் வங்கி தனது அதிகாரபூர்வ அறிக்கையில், கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு முதல் அலையின் பாதிப்பை விட குறைவாகவே இருக்கும் என்று கூறியது.

ஆனால் தற்போது இரண்டாவது அலை தனியார் நிறுவனங்களின் உற்பத்தியை பாதித்துள்ளது. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் மிகவும் பாதிக்கும் சூழல் நிலவுகிறது. மேலும், நாட்டில் வேலை இழப்புகள் மற்றும் வருமான குறைவும் அதிகரித்துள்ளது. தற்போது தோற்று பாதிப்புகள் குறைந்து வரும் நிலையிலும், மீண்டும் வணிக நடவடிக்கைகள் தொடங்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனால் 2020-21 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இந்தியா 1.6% வளர்ச்சி அடைந்துள்ள போதிலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3% ஆக குறைந்துள்ளது. நான்காம் காலாண்டில் எரிவாயு, மின்சாரம், நீர் வழங்கல் ஆகிய துறைகள் 9.1% வளர்ச்சியடைந்தாலும், ஹோட்டல், வர்த்தகம், போக்குவரத்து ஆகிய துறைகள் 2.3% ஆக சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: