இந்தியா

ஏப்ரலில் கிடைக்கும் கொரோனா தடுப்பூசி விலை ரூ1000..

கொரோனாவுக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும் என்பதுதான் உலக அளவிலான எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனாவாலா கூறுகையில், ஆக்ஸ்போர்ட் கோவிட் -19 தடுப்பூசி 2021 பிப்ரவரியில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயது மூத்தவர்களுக்கும், ஏப்ரல் மாதத்தில் பொதுமக்கள் தேவைக்காகச் சந்தையில் விற்பனைக்கு வரும். 2 டோஸ் கொண்ட இந்த தடுப்பூசியின் விலை 1000 ரூபாய் என்றளவில் இருக்கும். 2024க்குள் ஒவ்வொரு இந்தியருக்கும் தடுப்பூசி போடப்படும். அனைவருக்கும் கிடைக்க 2 அல்லது 3 ஆண்டுகள் தேவைப்படும் என்பதற்கு, தடுப்பூசியின் விலை, கொள்முதல் நேரம், மக்களின் விருப்பம் ஆகியவையே காரணம். இந்த தடுப்பூசியின் விலை 5-6 அமெரிக்க டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இந்திய மதிப்பில் 2 டோஸ் தடுப்பூசியின் விலை 1000 ரூபாயாக இருக்கும். இந்த தடுப்பூசியால் பெரிய அளவில் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. இந்தியச் சோதனைகளின் செயல்திறன் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் முடிவுகள் ஒன்றரை மாதங்களில் வெளியாகும்.

தடுப்பூசியை மக்களிடம் அவசர தேவை என்ற அடிப்படையில் பயன்படுத்த ஐரோப்பிய மருந்துகள் மதிப்பீட்டு நிறுவனம் அனுமதிக்கும் போது, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறைக்கு அனுமதி கேட்டு சீரம் நிறுவனம் விண்ணப்பிக்கும். குழந்தைகளைப் பொறுத்தவரை இந்த வைரஸ் தொற்று மற்ற நோய்களுடன் ஒப்பிடுகையில் அவ்வளவு பாதிப்பு ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. எனவே குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்துவதில் அவசரம் தேவையில்லை என்றார் அதார் பூனாவாலா.

loading...
Back to top button
error: Content is protected !!