தமிழ்நாடுமாவட்டம்

அவளை கண்டித்தேன்! வேண்டாம் என கூறியும் கேட்கவில்லை.. 25 வயது தங்கையை வெட்டிக்கொன்ற அண்ணனின் வாக்குமூலம்

சொந்த தங்கையை வெட்டிக்கொலை செய்த அண்ணன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நெல்லையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கு நல்லையா என்கிற குட்டி (30) என்ற மகனும், சரஸ்வதி (25) என்ற மகளும் உள்ளனர்.

இவர் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அண்ணன்-தங்கைக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவில் சரஸ்வதி அங்குள்ள ஒரு நல்லியில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குட்டி, சரஸ்வதியை அழைத்து பேசிக்கொண்டிருந்தார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

இதில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரம் அடைந்த குட்டி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரஸ்வதியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் இரத்த வெள்ளத்தில் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

பின்னர் நல்லையா போலீசில் சென்று சரணடைந்தார்.

போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில், எனது தங்கை சரஸ்வதி நர்சிங் படித்து விட்டு வேலைக்கு செல்கிறேன் என கூறி கொண்டு கவரிங் நகை விற்பனையில் ஈடுபட்டார்.

மேலும், டெய்லரிங் எம்பிராய்டரி பொருட்களை பல இடங்களுக்கு சென்று விற்பனை செய்து வந்தார். எனது பேச்சை கேட்காமல் அடிக்கடி விற்பனை என கூறிகொண்டு பலரிடம் போனில் பேசி கொண்டிருந்தார்.

இதை நான் கண்டித்ததோடு, விற்பனை வேண்டாம் என்றேன். ஆனால் அவள் கேட்கவில்லை, இதனால் தான் வெட்டிக்கொன்றேன் என கூறியுள்ளார்.

loading...
Back to top button
error: Content is protected !!