தமிழ்நாடுமாவட்டம்

கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டம்.. தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்..

ஆன்லைன் வழி கல்வியினை மாணவர்கள் தடையில்லாமல் பெற்றிடுவதற்காக அரசு, அரசு உதவி பெறும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் , பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.

கொரொனோவினால் 10 மாத காலமாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன .கொரோனா பரவல் குறைந்ததையொட்டி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரி திறக்கப்பட்டது .இந்நிலையில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.இந்த ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் தடையின்றி பங்கேற்கும் வகையில் 9,69,047 மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா டேட்டா கார்டு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னதாக அறிவித்திருந்தார்.

இதன்படி அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள்,பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 9,69,047 மாணவர்கள் பலனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Back to top button
error: Content is protected !!