5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டம்.. தொடங்கி வைத்த மாநில முதல்வர்..

மேற்குவங்க மாநிலத்தில் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் அம்மா திட்டத்தை முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தொடங்கி வைத்துள்ளார்.
தமிழத்தில் ஏழை, எளிய மக்கள் பசியாற தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, பல்வேறு மாநிலங்கள் அதேபோன்ற உணவக திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், மேற்குவங்கத்தில், அம்மா சமையலறை என்ற திட்டத்தை, முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தொடங்கி வைத்துள்ளார் .5 ரூபாய்க்கு, சாதம், பருப்பு, காய்கறி, முட்டை பொறியல் ஆகியவை வழங்கப்படுகின்றன.
மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள இந்த உணவகங்கள், தினமும் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை இயங்கும் என்றும், இதனை, மகளிர் சுய உதவிக் குழுவினர் பொறுப்பேற்று நடத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.