இந்தியா

அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகளை தாக்கிய பூனை..

மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸப்த்திரியில் பிரசவபிரிவில் புதிதாக பிறந்த குழந்தைகள் தனி அறையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆஸ்பத்திரியில் புதிதாக பிறந்த குழந்தைகளை அங்கு சுற்றித்திரிந்த பூனை தாக்கியுள்ளது. பூனை தாக்கியதில் ஒரு குழந்தையின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய பூனை கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஆஸ்பத்திரி அதிகாரி கூறியதாவது:- இந்த வாரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளை பூனை ஒன்று தாக்கியுள்ளது. பூனை தாக்கிய பச்சிளம் குழந்தைகள் தற்போது நலமுடன் உள்ளன. பூனையை பிடித்து செல்ல வனத்துறையிடம் தகவல் கொடுத்துள்ளேம் என்றார்.

loading...
Back to top button
error: Content is protected !!