உலகம்

நிறைவுக்கு வந்தது கேன்ஸ் திரைப்பட விருது விழா!!

கடந்த 6 ஆம் தேதி ஆரம்பமான 74 வது சர்வதேச புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விருது விழா 17 ஆம் தேதி நேற்றுடன் நிறைவுக்கு வந்தது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த வருடம் இந்த விழா ரத்து செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விழா ஒவ்வொரு வருடமும் மே மாதம் பிரான்ஸின் கேன்ஸ் நகரில் நடைபெறும்.

இந்நிலையில் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அமெரிக்காவின் காலேப் லாண்ட்ரி ஜோன்ஸ்க்கும், சிறந்த நடிகைக்கான விருது நார்வே நாட்டை சேர்ந்த ரெனடா ரீன்ஸ்வேக்கும் கிடைக்கபெற்றது.

இந்நிலையில், விருது விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான பால்ம் டீ ஒர் சிறப்பு விருதை ஜுலியா டக்கொர்னோ இயக்கத்தில் உருவான டைட்டேன் திரைப்படம் வெற்றிக்கொண்டது.

கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் பெண் தயாரிப்பாளர் ஒருவர் இந்த விருதை வென்றது இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: