தமிழ்நாடு

பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை காவேரி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில், இன்று முன்களப் பணியாளர் என்ற முறையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று #BoosterDose எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்” என பதிவிட்டுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: