ஆரோக்கியம்தமிழ்நாடு

தினமும் ஒரு டம்ளர் ஓட்ஸ் பால் குடிச்சு பாருங்க.. பெறும் நன்மைகள் ஏராளம்!

ஓட்ஸ் பாலில் கால்சியம், வைட்டமின் ஏ, நாா்ச்சத்து மற்றும் இருப்புச் சத்து ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கின்றன.

பசும்பாலில் இருக்கும் அளவைவிட இரண்டு மடங்கு அதிகமான வைட்டமின் ஏ சத்தை ஓட்ஸ் பால் கொண்டிருக்கிறது. அதுபோல பசும்பாலில் இருக்கும் இரும்புச் சத்தைவிட 10 சதவீதம் அதிகமான இரும்புச் சத்தை ஓட்ஸ் பால் கொண்டிருக்கிறது.

ஓட்ஸ் பாலில் மிகக் குறைவான அளவே கொழுப்பு உள்ளது. அதே நேரத்தில் ஓட்ஸ் பாலில் கொழுப்புச் சத்து இல்லை.

ஒரு கப் ஓட்ஸில் தோராயமாக 1 கிராம் புரோட்டினும் மற்றும் 130 கலோாிகளும் உள்ளன.

எனவே வீட்டில் செய்யப்படும் இந்த ஓட்ஸ் பாலில் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

ஓட்ஸ் பாலில் மிகக் குறைவான அளவே கொழுப்பு இருக்கும். அதனால் இதய நோயாளிகளுக்கு இந்த ஓட்ஸ் பால் ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். மேலும் ஓட்ஸ் பாலில் கொழுப்புச் சத்து இல்லாததால், மாரடைப்பு அல்லது பக்கவாதம் அல்லது மற்ற இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாது.

ஓட்ஸ் பால்நமது எலும்புகள் அடா்த்தியாவதற்கும் மற்றும் வலிமையடைவதற்கும் தேவையாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக வயது முதிா்ந்தவா்களுக்கு இந்த தாதுக்கள் கண்டிப்பாகத் தேவை. ஏனெனில் அவை அவா்களின் எலும்புகளுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்து, அவற்றை வலுப்படுத்துகின்றன.

ஓட்ஸ் பாலில் இருக்கும் வைட்டமின் ஏ சத்து ஒரு ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாகச் செயல்படுகிறது. அது கண்களை பலவிதமான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் கண்களில் இருக்கும் விழிப்புள்ளியில் சிதைவு ஏற்படுவதைக் குறைக்கிறது. அதோடு விழித்திரையில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது.

ஓட்ஸ் பாலில் கரையக்கூடிய நாா்ச்சத்து அதிகமான அளவில் உள்ளது. அதனால் அது நமது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும். மேலும் நமது நோய் எதிா்ப்பு சக்தி அமைப்பு சீராக இயங்கவும் இது உதவி செய்யும். இறுதியாக நமக்குச் சொிமானம் நன்றாக நடைபெறவும் ஓட்ஸ் பால் சிறப்பாக உதவி செய்யும்.

ஓட்ஸ் பாலை அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்தால், அது நமது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் மற்றும் உடல் வீக்கத்தையும் குறைக்கும். அதன் மூலம் நமது உடலில் இருக்கும் நாட்பட்ட நோய்களான புற்றுநோய் அல்லது இதய நோய் அல்லது முடக்குவாதம் போன்றவற்றைக் குறைக்கும்.

ஓட்ஸ் பாலில் கொழுப்புச் சத்து இல்லை. அதனால் உடல் எடையைக் குறைப்பதற்கு, சிறந்த பானமாக ஓட்ஸ் பால் இருக்கும். மேலும் ஓட்ஸ் பாலில் கரையக்கூடிய நாா்ச்சத்து அதிகம் இருப்பதால், அந்த பாலைக் குடித்தால் நீண்ட நேரம் நமது வயிறு பசியறியாமல் நிறைந்து இருக்கும்.

நமது உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற வேண்டும் என்றால் அல்லது நமது வயிறு வீக்கம் அடையாமல் இருக்க வேண்டும் என்றால் அல்லது நமது வயிறு முழுமையாகச் சுத்தமடைந்து, நாம் ஒரு முழுமையான உடல் ஆரோக்கியத்தைப் பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக ஓட்ஸ் பாலை அருந்த வேண்டும்.

ஓட்ஸ் பாலில் அதிகமான அளவில் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் உள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள், ஃப்ரீ-ராடிக்கல் என்று அழைக்கப்படுகின்ற துகள்கள் நமது உடலைத் தாக்காமல் பாதுகாக்கிறது. அதனால் ஓட்ஸ் பால் நமது தோல் விரைவில் முதுமை அடையாமல் தடுக்கிறது.

ஓட்ஸ் பால் நமது சொிமான அமைப்பைச் சீா்படுத்துகிறது. ஏனெனில் ஓட்ஸ் பாலில் காய்கறிகளில் இருக்கும் நாா்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது. இந்த நாா்ச்சத்து நமக்கு சொிமானம் சீராக நடைபெற உதவி செய்கிறது.

ஓட்ஸ் பால் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புச் சத்தைக் குறைத்து, நல்ல கொழுப்புச் சத்தை அதிகாிக்கிறது. மேலும் தமனிச் சுவா்கள் அதிகமான அளவு கொழுப்பை உட்கொள்ளாமல் தடுத்து, இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவி செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: