ஆன்மீகம்

பஞ்ச பூதங்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்?

கனவுகளின் பலன்கள்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் தான் உலகம் மற்றும் அதில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் தோன்றின. பஞ்சபூதங்களையும் ஒவ்வொரு ஸ்தலத்தில் மையப்படுத்தி காஞ்சிபுரம் – நிலம், திருவானைக்காவல் – நீர், திருவண்ணாமலை – நெருப்பு, காளஹஸ்தி – காற்று, சிதம்பரம் – ஆகாயம் ஆகிய ஐந்தும் பஞ்சபூத ஸ்தலங்களாக அமைத்துள்ளனர். புவியியல் அடிப்படையில் இந்த ஐந்து ஸ்தலங்களும் அமைந்திருக்கும் தீர்க்கரேகை ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கின்றன என்பது அதிசயிக்கத்தக்க ஒற்றுமையாகும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சபூத ஸ்தலங்களின் பெருமையை நமது முன்னோர்கள் அறிந்துள்ளனர். மேலும், இதன் பெருமை குறித்து பழம்பெரும் தமிழ் நூல்களான புறநானூறு, தொல்காப்பியம் போன்றவற்றில் கூட குறிப்பிடப்பட்டிருப்பது முக்கியமாகும். இந்நிலையில், நமது கனவுகளில் பஞ்சபூதங்கள் வந்தால் எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்.

நிலம் கனவில் வந்தால்

நிலநடுக்கம் வந்தது போல கனவு கண்டால் நீங்கள் இடத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.

மலையை உடைத்து குடைவது போல கனவு கண்டால், உங்களின் பிரச்சனைகள் எல்லாம் சரியாகும் என்று பொருள்.

மலையில் இருந்து உருண்டு விழுவது போல கனவு கண்டால், ஒரு பெரிய ஆபத்து வரபோவதன் அறிகுறியாகும்.

மலை ஏறுவது போல கனவு வந்தால், நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் என்று அர்த்தம்.

பசுமையாக இருக்கும் வயலை கனவில் காண்பது மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடக்க போவதன் அறிகுறியாகும்.

நீர் கனவில் வந்தால்

அருவியில் தண்ணீர் கொட்டுவது போல் கனவு கண்டால் மிகுந்த பணவரவு ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

இடியுடன் மழை வருவது போல கனவு கண்டால், தேவையற்ற செலவு ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

படகு அல்லது ஓடம் தண்ணீரில் மிதப்பது போல கனவு கண்டால் துயரமான செய்தி வரபோகிறது என்று அர்த்தம்.

நதியை கனவில் கண்டால் நமக்கு ஏற்பட்டிருந்த துன்பம் அனைத்தும் விரைவில் ஓடி விடும் என்று பொருள்.

கடற்கரையில் (பீச்) இருப்பது போல் கனவு கண்டால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவீர்கள் என்று பொருள்.

உங்கள் கனவில் கடல் வந்தால், வெளிநாடுகளுக்குப் போவதற்கான வாய்ப்பு எளிதாகும். மேலும் வெளிநாட்டவருடன் வியாபாரத் தொடர்பு ஏற்பட்டு செல்வம் பெருகும்.

குளத்து நீரில் கால் கழுவுவதை போல கனவு கண்டால், உங்களின் தரித்திரம் விலகி உங்களிடம் புது உற்சாகம் ஏற்படும் என்று அர்த்தம்.

இதையும் படிங்க:  இன்றைய ராசிபலன் (18-08-2021)

குளத்தில் தாமரை, அல்லி பூக்கள் பூத்து இருப்பது போல கனவு கண்டால், தடையற்ற பணவரவு உண்டாகும் என்று அர்த்தம்.

குளத்தில் குளிப்பது போல கனவு கண்டால், உங்களுக்கு இருக்கும் நல்லபெயரையும், வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது என்று அர்த்தம்.

மழை கனவில் வந்தால் மகிழ்ச்சியான செய்தி வரபோகிறது என்று அர்த்தம்.

ஆற்றுநீர், கடல் அலை போன்றவற்றை நீங்கள் கைகளால் பிடிப்பது போல கனவு வந்தால் உங்களுக்கு செல்வம் சேர போகிறது என்று அர்த்தம்.

வறண்ட குளத்தை கனவில் கண்டால், புதிது புதிதாக செலவுகள் ஏற்படும் என்று அர்த்தம்.

குளத்தில் அதிகமான தண்ணீர் இருப்பது போல கனவு வந்தால், பெரிய இடத்தில் இருந்து ஆதரவு கிடைக்கும் என்று அர்த்தம்.

கலங்கல் இல்லாத சுத்தமான நீர் ஊற்றைக் கனவில் கண்டால், வாழ்க்கையில் எவ்வித துன்பமும் ஏற்படாது என்று அர்த்தம்.

கலங்கிய சுத்தமற்ற நீர் ஊற்றை கனவில் கண்டால் கஷ்டங்கள் ஏற்படும் என்று குறிக்கும்.

தண்ணீரில் தத்தளிப்பது போல கனவு வந்தால், புதிதாக உருவான நட்பால் கஷ்டங்கள் ஏற்படும் என்று அர்த்தம்.

தண்ணீரில் மூழ்குவது போல கனவு வந்தால், உங்களின் குழந்தைகளால் சந்தோஷம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

மரங்களுக்கும், செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சுவது போல கனவு கண்டால் உங்களுக்கு நன்மைகள் செய்ய பல பேர் வருவார்கள் என்று அர்த்தம்.

கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதுபோல கனவு வந்தால், மனதில் நினைத்த செயல்கள் நினைத்தபடியே முடியும் என்று அர்த்தம்.

கிணறு கனவில் வந்தால் மிகவும் நல்லதாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும். திருமணம் ஆனவர்களாக இருந்தால் அவர்கள் குடும்பத்தில், வேறு யாருக்காவது திருமணம் நடைபெறும் என்று அர்த்தம்.

காற்று கனவில் கண்டால்

தென்றல் வீசுவது போல கனவு வந்தால், உங்களின் எல்லா விருப்பங்களும் நிறைவேறும் என்று அர்த்தம்.

பனி பெய்வது போல கனவு கண்டால் உங்களுக்கு துன்பம் வரபோகிறது என்று அர்த்தம்.

புயல், காற்று, சூறாவளி ஆகியவை வருவது போல கனவு வந்தால் நோய்கள் உண்டாக போகிறது என்று அர்த்தம்.

நெருப்பு கனவில் வந்தால்

நெருப்பு கனவில் வந்தால் செல்வ செழிப்பு ஏற்படும் என்று பொருள்.

ஓமகுண்டம் கனவில் வந்தால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்று அர்த்தம்.

தீ பிடித்து விட்டது போல கனவு கண்டால் கெட்ட செய்திகள் வரபோகிறது என்று அர்த்தம்.

தீ மிதிப்பது போல் கனவு கண்டால், பெரும் சிக்கலில் மாட்ட போகிறீர்கள் என்று பொருள்.

தீபம் கனவில் வந்தால் உடல்நலம் சீராகும் என்று அர்த்தம்.

இதையும் படிங்க:  குழந்தை பாக்கியத்தை தரும் மந்திரம்!

விளக்கு எரிவது போல கனவு கண்டால் வாழ்வில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

சூரியன் கனவில் வந்தால் உடல்நல கோளாறுகள் நீங்கி ஆரோக்கியம் மேம்பட போகிறது என்று அர்த்தம்.

சூரிய கிரகணம் ஏற்பட்டது போல கனவு வந்தால் தீமை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

சூரிய கிரகணம் முடிந்தது போல கனவு கண்டால் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போகிறீர்கள் என்று பொருள்.

நெருப்பு உங்களை சுற்றி எரிவது போல கனவு வந்தால், உடல் பலமடையும் என்று அர்த்தம்.

நெருப்பு பற்ற வைப்பது போல கனவு வந்தால், முன் கோபத்தால் நல்ல வாய்ப்பை நழுவவிட போகிறீர்கள் என்று அர்த்தம்.

ஆகாயம் கனவில் கண்டால்

வானில் நட்சத்திரத்தை கனவில் கண்டால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று அர்த்தம்.

நட்சத்திரங்கள் வானில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் நோக்கி இடம்பெயர்ந்து செல்வது போல கனவு கண்டால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும் என்று அர்த்தம்.

நட்சத்திர கூட்டத்தை கனவில் கண்டால் பதவி உயர்வு உண்டாகும் என்று அர்த்தம்.

நிலவை மேக கூட்டம் மூடுவது போல கனவு கண்டால் புதிய பிரச்சனைகள் உண்டாக போகிறது என்று அர்த்தமாகும்.

நிலா வானில் பிரகாசமாக இருப்பது போல கனவு கண்டால் செய்யும் தொழிலில் லாபம் அதிகம் உண்டாகும் என்று அர்த்தம்.

நீல நிற வானம் கனவில் வந்தால் நல்ல பலன்கள் ஏற்படும் என்று அர்த்தம்.

சிவந்த வானத்தை கனவில் கண்டால் நல்லதல்ல.

நிலவை கனவில் கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும் என்று அர்த்தம்.

மின்னல் கனவில் வந்தால் தொழில் முன்னேற்ற பாதையில் செல்ல போகிறது என்று அர்த்தம்.

மேகக்கூட்டம் கனவில் வந்தால் நீங்கள் சோதனையான காலகட்டத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம்.

வானவில் கனவில் வந்தால் வாழ்க்கையில் நல்ல பலன்கள் ஏற்பட்டு பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

இடியுடன் மழை பெய்வதைப் போல கனவு கண்டால், சொந்தங்கள் விரோதிகள் ஆவார்கள்.

சந்திரனை, சூரியன் பிடிப்பது போல கனவு கண்டால் (சந்திர கிரகணம்) யோகம் ஏற்படும் என்று அர்த்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: