ஆரோக்கியம்

வியக்க வைக்கும் ஆரஞ்சு பழத்தோலின் நன்மைகள்!

ஆரஞ்சு பழத் தோலில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி போன்றவை ஏராளமாக உள்ளன. இதனால், நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. ஆரஞ்சு பழத் தோலை நன்கு காயவைத்து அதை பவுடர் செய்து பயன்படுத்தும்போது கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

மருத்துவ பயன்கள்

உடலில் இருக்கும் கொழுப்புகளை அகற்றி, இதயத்திற்கும் செல்லும் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

புற்றுநோயை வளர்க்கும் செல்களின் வளர்ச்சியை முழுமையாகத் தடுக்கிறது.

ஆரஞ்சு பழத் தோலில் இருக்கும் வேதிப்பொருட்கள் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபட உதவுகிறது.

மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற ஆரஞ்சு பழத்தோல் பெரிதும் உதவுகிறது.

கிருமி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் தொற்றுத் தன்மைகளை ஆரஞ்சுத் தோல் கொண்டுள்ளதால் எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நிறைந்த சருமத்திற்கு நல்ல பலன் தரும்.

இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும் குணத்தை ஆரஞ்சுப் பழத்தோல் கொண்டுள்ளது.

ஆரஞ்சுப் பழத்தோலில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளது.

பற்களில் ஏற்படும் கூச்சத்தை சரி செய்யும் குணமும் ஆரஞ்சுத் தோல்களுக்கு உள்ளது.

மஞ்சள் கறை படிந்துள்ள பற்களை பளிச்சிட உதவும்.

ஊட்டச்சத்து பயன்கள்

ஆரஞ்சுப் பழத்தோலில் இருக்கும் வைட்டமின் சி சிறந்த நோய் எதிர்ப்புச் சத்தாகும்.

ஆரஞ்சு பழத்தோலிலுள்ள நார்ச்சத்துக்கள் குடலின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதால், ஜீரண அமைப்பு நன்றாக இயங்குகிறது.

ஆரஞ்சு பழத் தோலில் உள்ள நார்ச்சத்துக்கள் வயிற்று நோயை குணப்படுத்துகிறது.

மேலும் கொசுக்கள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளை விரட்டும் இயற்கையான அமிலங்களை ஆரஞ்சு பழத்தோல் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:  பழங்களை சாப்பிட எந்த நேரம் சரியானது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: