டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்.. பொதுமக்கள் கடும் அவதி..
டெல்லியில் காற்றின் தர குறியீடு அளவு 320 என்ற மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நாட்டின் பிற மாநிலங்களை விட, தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க்கழிவுகள் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே டெல்லியில் காற்று மிகவும் மாசுபட்ட நிலையில், கடந்த சில நாட்களாக அது மேலும் மோசமடைந்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இன்று காற்று மாசுபாட்டின் தரம் ‘மிகவும் மோசமான’ பிரிவில் தொடர்கிறது. காற்று மாசுபாட்டின் தரம் 320-ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான காற்று மாசு காரணமாக டெல்லியில் எங்கு நோக்கினும் புகைப்படலம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.