இந்தியா

மேற்கு வங்கத்தில் இன்று 4ம் கட்ட தேர்தல் தொடங்கியது..!

மேற்குவங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில், நான்காம் கட்டமாக 44 தொகுதிகளுக்கு, இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 91 தொகுதிகளுக்கு மூன்று க‌ட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் மேலும் 44 தொகுதிகளுக்கு, நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்‍கு தொடங்கிய வாக்‍குப்பதிவு, இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்‍குப்பதிவை யொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க., காங்கிரஸ் இடதுசாரி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய மணப் பெண்! என்ன காரணம் தெரியுமா? வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: