இந்தியா

இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்? பிரதமர் மோடி அவசர ஆலோசனை..!

நக்ரோடாவில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் மற்றும் உளவுத்துறை நிறுவனத்துடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தீவிரவாதிகள் தாக்குதல்:

இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, எல்லை பகுதிகளில் உச்சகட்ட உஷார் நிலையில் தான் ராணுவ வீரர்கள் இருப்பார்கள். இந்திய படைகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக எல்லையில் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதனால் அதிக அளவில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டிருக்கிறது.

images 6 4

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள நக்ரோடாவில் நேற்று அதிகாலை பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சம்பாவில் இருந்து வந்த லாரியை பான் சுங்க சாவடி அருகே அதிகாலையில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்ய முயன்றனர். அதன் அருகில் வீரர்கள் சென்றபோது, அதில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனே, அந்த லாரியை சுற்றிவளைத்து வீரர்கள் தாக்குதல் நடத்தினர். அதிகாலையில் தொடங்கி 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த தாக்குதலில், லாரியில் இருந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

military

மும்பை தாக்குதல் போன்று மிகப்பெரிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் மற்றும் உளவுத்துறை நிறுவனத்துடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

loading...
Back to top button
error: Content is protected !!