தமிழ்நாடு

அமெரிக்கா செல்லும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்..!

சிகிச்சைக்காக இன்று காலை 10.30 மணிக்கு விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் தேமுதிக தலைவர் விஜய்காந்த் செல்கிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் தேமுதிக தலைவர் விஜய்காந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் சென்னை திரும்பிய அவருக்கு, அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகிறார் அவர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு அவர் அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியானது. ஆனால், அதிகாலை விமானத்தில் அவர் பயணிக்க வில்லை.

இந்நிலையில், காலை 10.30 மணி அளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம், அவரது மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் அமெரிக்கா செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை!
Back to top button
error: