இந்தியா

கோழி விற்பனை மற்றும் கொள்முதல் செய்ய தற்காலிக தடை – பறவை காய்ச்சல் எதிரொலி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து கோழி பண்ணைகளில் உள்ள கோழிகளை அழிக்க அந்த மாநிலத்தில் அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல் அந்த மாநிலத்தின் சில பகுதிகளில் கோழி விற்பனை மற்றும் கொள்முதலிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பறவை காய்ச்சல் அபாயம்:

இந்தியாவில் தற்போது பறவை காய்ச்சல் அபாயம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் தற்போது மட்டும் 7 மாநிலங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது வரை 20 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்துள்ளது. கேரளாவில் பெரும் பாதிப்புகளை இந்த பறவை காய்ச்சல் ஏற்படுத்தி உள்ளது. இந்த பரவல் அச்சம் காரணமாக பறவைகள் பூங்காக்கள் மூடப்பட்டன. தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

poultry farm 660 060121041327 1

இது மட்டும் அல்லாமல் டெல்லியில் 200 க்கும் மேற்பட்ட வாத்துகள் மற்றும் காகங்கள் மரணித்து விட்டன. சோதனை செய்து பார்த்ததில் பறவை காய்ச்சல் காரணமாக தான் அனைத்து பறவைகளும் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக தலைநகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பர்பானி மாவட்டத்தின் அருகே உள்ள முரும்பா கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட கோழி குஞ்சுகள் திடீர் என்று மரணித்து. இறந்த கோழி குஞ்சுகளின் ரத்த மாதிரிகளை மாவட்ட நிர்வாகம் தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தது.

20210108117L 696x392 1

ஆய்வின் முடிவில் பறவைகள் அனைத்தும் பறவை காய்ச்சல் காரணமாக மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அந்த மாவட்டத்தை சுற்றி 1 கிலோமீட்டர் அளவில் உள்ள கோழி பண்ணைகளில் உள்ள கோழிகளை அழிக்க அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே போல் கோழி விற்பனை மற்றும் கொள்முதல் செய்யவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.

Back to top button
error: Content is protected !!