பிரபல மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் (WhatsApp) தனது பயனர்களுக்கு புதிய அப்டேட்களை வழங்குவதில் எப்போதும் முன்னிலையில் உள்ளது.
இருப்பினும், புதிய புதுப்பிப்புகள் ஆண்ட்ராய்டு (Android) இன் சமீபத்திய பதிப்புகளுக்கு மிகவும் பொருந்தும். எனவே, அக்டோபர் 24 முதல் பழைய ஆண்ட்ராய்டு பதிப்புகளில் வாட்ஸ்அப் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் முந்தைய பதிப்புகளில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று வாட்ஸ்அப் அதன் FAQ பிரிவில் இந்த தகவலை தெளிவுபடுத்தியுள்ளது. பயனர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் பதிப்பை சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பழைய ஆண்ட்ராய்டு பதிப்புகளில் தனியுரிமை பாதுகாப்பு அவ்வளவு சிறப்பாக இல்லாததாலும், வாட்ஸ்அப்பின் சமீபத்திய புதுப்பிப்புகள் பழைய பதிப்புகளில் வேலை செய்யாததாலும் வாட்ஸ்அப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.