‘ப்ளூ டிக்ஸ்’ தொடர்பாக ட்விட்டர் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதிக ஃபாலோயர்களை கொண்ட 10,000 நிறுவனங்களுக்கு இலவச ப்ளூ டிக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரின் அதிகாரப்பூர்வ கணக்குகளில் ப்ளூ டிக்ஸ் தொடர்பான மாற்றங்களின் பின்னணியில், Twitter CEO Elon Musk இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ப்ளூ டிக் மெம்பர்ஷிப் பெற ஆயிரம் டாலர்கள் (சுமார் ரூ.82,000) செலுத்த வேண்டும் என்று சமீபத்தில் ட்விட்டர் தெளிவுபடுத்தியது. ஆனால் சில நிறுவனங்களுக்கு இந்த மாதாந்திர கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிகப் பின்தொடர்பவர்களைக் கொண்ட 10 ஆயிரம் நிறுவனங்கள் பணம் செலுத்தத் தேவையில்லை என கூறப்படுகிறது. மேலும் ட்விட்டரில் அதிக செலவு செய்யும் 500 விளம்பரதாரர்களும் தங்களது ப்ளூ டிக் குறியை இலவசமாகப் பெறலாம் என்று தெரிவித்துள்ளது.
மறுபுறம், ட்விட்டரில் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளில் நீல நிற டிக் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க தகுதியுடையவர்கள் என்று மஸ்க் சமீபத்தில் அறிவித்தார். ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பிறகு சரிபார்க்கப்படாத பயனர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் ட்வீட்கள் பரிந்துரைகளில் காட்டப்படாது. அதாவது, சரிபார்க்கப்படாத கணக்குகளின் ட்வீட்கள் அதிகமானவர்களைச் சென்றடையாது.