ஒவ்வொரு நாளும் வாட்சப், பேஸ்புக், யூடுயூப் போன்ற செயலிகள் தான் பெரும்பாலான மக்களின் முக்கிய தேவையாக மாறி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் அவ்வப்போது புதுபுது அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். ஆனாலும் இதுபோன்ற தளங்களின் பாதுகாப்பின்மையால் மோசடி செயலும் அரங்கேறுகிறது.
இந்நிலையில் பல்வேறு கட்டமைப்புகளை உடைய டெலிகிராம் அதன் செயலியை கடந்த 2013ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஆனால் இதை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தாத நிலையில் தற்போது வாட்சப் செயலியை மிஞ்சும் அளவுக்கு புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளனர். அதாவது, ஹைட் வித் ஸ்பாய்லர் ஆப்சன் மூலம் போட்டோ, வீடியோக்களை மெல்லிய திரை போன்றவற்றை மறைத்து வைப்பது.
- Advertisement -
மொபைலில் நீக்கிய புகைப்படம், வீடியோ போன்றவைகளை ஜீரோ ஸ்டோரேஜ் மூலம் ரெகவரி செய்வது, போட்டோ, வீடியோ மீது எழுத்தின் அளவு, பார்மேட் மற்றும் பேக்ரவுண்டு போன்றவற்றை மாற்றுவது, பிரிமியம் பயனாளர்களுக்கு 10 அனிமேஷன் எமோஜிகளை போன்ற புது வகையான அப்டேட்களை அறிவித்துள்ளனர்.