வால்மார்ட்டுக்கு சொந்தமான PhonePe நிறுவனம் புதிய பிளே ஸ்டோரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர் ‘Indus Appstore’. கூகுள் மற்றும் ஆப்பிள் பிளேஸ்டோருக்கு போட்டியாக சந்தைக்கு வந்துள்ளது. இது பல்வேறு வகையான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. நிறுவனம் ஆண்ட்ராய்டு ஆப் டெவலப்பர்களை தங்கள் ஆப்ஸை ப்ளே ஸ்டோரில் பட்டியலிட அழைக்கிறது. இது முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 24 மணிநேர வாடிக்கையாளர் ஆதரவு, 12 உள்ளூர் மொழிகள் உள்நாட்டுப் பயனர்களால் எளிதாகப் பயன்படுத்தும்படி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ப்ளே ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ள ஆப்ஸ் முதல் வருடத்திற்கு இலவசம். அதன் பிறகு, கட்டணம் வசூலிக்கப்படும் என்று PhonePe தெரிவித்துள்ளது. டெவலப்பர்களால் ஆப்-இன்-ஆப் பர்ச்சேஸ்கள் மற்றும் பிற பேமெண்ட்டுகளுக்கு எந்தவிதமான கட்டணங்களும் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை கூகுள் மற்றும் ஆப்பிள் ப்ளே ஸ்டோர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவற்றுக்கு மாற்று இல்லை. இதை வைத்து வாடிக்கையாளர்களுக்கு வசதியாக ‘இண்டஸ் ஆப்ஸ்டோர்’ கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இண்டஸ் ஆப்ஸ்டோரின் இணை நிறுவனர் ஆகாஷ் டோங்ரே கூறுகையில், 2026ஆம் ஆண்டுக்குள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன் முதலிடத்தில் இருக்கும். Indus Appstore அதன் சந்தை வரம்பை விரிவுபடுத்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாக கொண்டு வரப்பட்டதாகவும் மற்ற பிளேஸ்டோர்களுக்கு நம்பகமான மாற்றாக வழங்குவதாகவும் அவர் கூறினார்.