தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிநீக்கங்கள் நிறுத்தப்படவில்லை. சமீபத்தில், ஆயிரக்கணக்கானோரை பணிநீக்கம் செய்ய மற்றொரு நிறுவனம் தயாராகியுள்ளது.
நெதர்லாந்தைச் சேர்ந்த சுகாதார சாதன நிறுவனமான பிலிப்ஸ், செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உலகம் முழுவதும் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
- Advertisement -
இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராய் ஜேக்கப்ஸ் கூறியுள்ளதாவது, “இது கடினமான நேரம். கடும் நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளதால் 2025 ஆம் ஆண்டிற்குள் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டியது அவசியம்” என்று கூறியுள்ளார்.