அடையாளம் தெரியாத நபர்கள் மெசேஜ் அனுப்பினால் அவர்களின் பெயர்களை கண்டறியும் வகையில் வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
பயனர்களை கவரும் வகையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் பலவிதமான அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்தவகையில் வாட்ஸ்ஆப் குழுவில் இருந்து அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் மெசேஜ் அனுப்பினால் அவர்களின் பெயர்களை எளிதில் கண்டறியும் வகையில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. எண்களை சேமித்து வைக்காவிட்டாலும் மெசேஜ் அனுப்புபவர்களின் பெயர்களை கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வரும்காலங்களில் அனைத்து வகையான பயனர்களும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
