மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ்அப் செயலியை பல கோடிக்கணக்கான பயனர்கள் உபயோகித்து கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து இதற்கு காரணம் வாட்ஸ்அப் end-to-end encrypted message மெசேஜ் சேவையை பயனர்களுக்கு வழங்குவது தான். மேலும் அத்துடன் சமீப காலமாகவே வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு உதவக்கூடிய வகையில் புதிய அப்டேட்களையும் தொடர்ந்து வெளியிட்டு கொண்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது Chat Lock அம்சத்தை வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் தனிப்பட்ட ஒருவருடைய Chat box – ஐ பிறர் பார்க்க முடியாத அளவுக்கு நாம் லாக் செய்து வைத்துக்கொள்ளலாம். அதை உங்களது கைரேகை அல்லது பாஸ்வேர்ட் பதிவிட்டால் மட்டுமே ஓபன் செய்ய முடியும்.
இதனையடுத்து இப்புதிய அம்சம் தற்போது பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ் அப்பில் நீங்கள் லாக் செய்து வைத்திருக்கும் தனிப்பட்ட நபர் அனுப்பும் வீடியோக்கள் மற்றும் ஆடியோ, இமேஜ் ஆகியவை உங்களது கேலரியில் பதிவிறக்கம் செய்யப்படாது நீங்கள் அனுமதித்தால் மட்டுமே பதிவிறக்கம் முடியும்.