ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ், இந்த ஆண்டு புதிய பணி நீக்கங்களை திட்டமிட்டுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
மெட்டா நிறுவனம், கடந்த ஆண்டு, தனது ஊழியர்களில் 13 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்தது. அதைப்போலவே இந்த ஆண்டும் 13 சதவீத ஊழியர்களை மெட்டா நிறுவனம் ஆட்குறைப்பு செய்யும் என்றும், பணிநீக்கங்கள் பல சுற்றுகளாக அறிவிக்கப்படும் என்றும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளது.
- Advertisement -
முதல் பணி நீக்க உத்தரவு அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என்றும், பொறியியல் சாராத பணிகளில் உள்ளவர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.