ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா புதிய சமூக வலைதளத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறது. கிட்டத்தட்ட இன்ஸ்டாகிராம் போலவே இருக்கும் என்று கருதப்படும் இந்த ஆப் டுவிட்டருக்கு போட்டியாக உருவாக்கப்படுவதாக தெரிகிறது. இந்த புதிய சமூக ஊடக தளம் ஜூன் மாதத்தில் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த புதிய தளத்தில் பதிவு செய்யாமல் நேரடியாக இணைக்க முடியும் என்று தொழில்நுட்ப வட்டாரங்கள் கூறுகின்றன. ட்விட்டரைப் போன்ற உரைகள் மற்றும் காலவரிசை பதிவுகளைக் (Timeline Post) கொண்ட பயனர்களுக்கு இது கிடைக்கும்.
மெட்டாவின் கீழ் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் வெற்றியைக் குறிப்பிட தேவையில்லை. விரைவில் அறிமுகப்படுத்தப்படும் புதிய தளமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த புதிய தளத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.